திருவண்ணாமலையில் முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்

திருவண்ணாமலையில் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

Update: 2020-07-27 01:20 GMT
திருவண்ணாமலை, 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், அதனை தடுக்க தமிழக அரசு மூலம் பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்ட பல்வேறு கட்டுப் பாடுக ளுடனான ஊரடங்கு உத்த ரவும் தொடர்ந்து அமலில் உள்ளது. இந்த நிலையில் ஜூலை மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளும் எந் தவிதமான தளர்வுகளும் இன்றி தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்து இருந்தது.

அதன்படி இந்த மாதத்திற்கான 4-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு கடை பிடிக்கப் பட்டது. இதையொட்டி நேற்று முன்தினம் பொதுமக்கள் கடை வீதி களுக்கு வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர்.

நேற்று திருவண்ணாமலை நகரத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்கள், டீக்கடைகள், சலூன்கடைகள், காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டு காணப்பட்டது. அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. இருப்பினும் நேற்று மதியம் வரை சிலர் இருசக்கர வாகனங்களில் சாலையில் வலம் வந்தனர். பெரும்பாலான பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங் கினர்.

ஊரடங்கினால் இறைச்சி கடைகள் மூடப்பட்டு இருந் ததால் அசைவம் சாப்பிட முடி யாமல் அசைவப் பிரியர்கள் அதிருப்தி அடைந் தனர். பெட்ரோல் நிலை யங்களும் மூடப்பட்டதால் சிலர் தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் போட முடியாமல் தவித்தனர். மருந்து கடைகள், மருத்துவமனைகள் மட்டும் திறந்திருந்தது. பால் பூத்கள் சில இடங்களில் மாலை வரை திறந்து இருந்தன.

வாகன சோதனை

திருவண்ணாமலை நகரின் முக்கிய சந்திப்பு பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியிலும், வாகன சோதனைகளிலும் ஈடுபட் டனர். தேவையின்றி வெளியே சுற்றியவர்களை போலீசார் பிடித்து வழக்குப் பதிவு செய்து செய்தனர். இந்த ஊரங்கு காரணமாக திருவண்ணா மலை நகரமே மக்கள் நடமாட்டமின்றி வெறிச் சோடி காணப்பட் டது.

போளூர்

போளூரில் ஊர டங்கையொட்டி சாலைகள் போக்குவரத்து இன்றி வெறிச்சோடியது. கடைகள், வியாபார நிறுவனங்கள் அடைக்கப்பட்டு இருந்தன. துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையில் போலீசார் போளூர் நகரம் மற்றும் கிராமங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட் டனர்.

மோட்டார் சைக்கிள்களில் தேவையின்றி சுற்றியவர்களை போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர். ஊரடங்கினால் பொதுமக்கள் வீட்டுக் குள்ளேயே முடங்கி இருந்தனர்.

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம், சந்தவாசல் மற்றும் ஏ.கே. படவேடு ரேணுகாம்பாள் கோவில் பகுதிகளில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இருப்பினும் ரேணுகாம்பாள் கோவில் உள்பட பல்வேறு கோவில்களுக்கு மோட்டார் சைக்கிளில் குடும்பத்தோடு சென்றவர்களை போலீசார் தடுத்து திருப்பி அனுப்பினர்.

அப்போது ஒரே ஸ்கூட்டரில் கணவன், மனைவி, குழந்தைகள் என 5 பேர் ஆபத்தான முறையில் வந்தனர். இவ்வாறு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று போலீசார் அறிவுரை வழங்கினர்.

ஆரணி

ஆரணி நகரில் பிரதான சாலைகளான மார்க்கெட் ரோடு, காந்திரோடு, மண்டிவீதி, பெரிய கடைவீதி, மற்றும் சைதாப்பேட்டை, அருணகிரிசத்திரம், வி.ஏ.கே.நகர், ஆரணிப்பாளையம், கொசப்பாளையம் உள்பட அனைத்து பகுதிகளிலும் பால்கடைகள், மருந்து கடைகள் மட்டுமே திறந்திருந்தன. மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப் பட்டது.

மேலும் செய்திகள்