திருச்சியில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 5 பேர் பலி புதிதாக 149 பேருக்கு தொற்று

திருச்சியில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 5 பேர் பலியானார்கள். புதிதாக 149 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2020-07-29 06:21 GMT
திருச்சி, 

திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 149 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 755 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் நேற்று 70 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இந்தநிலையில் திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் நேற்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தனர். அவர்கள் திருச்சி தென்னூர் அண்ணாநகரை சேர்ந்த 75 வயது முதியவர், 62 வயது முதியவர், ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த 70 வயது முதியவர், உறையூரை சேர்ந்த 45 வயது பெண், மணப்பாறையை சேர்ந்த 42 வயது ஆண் ஆகியோர் ஆவர். ஒருவர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். ஆனால் இந்த உயிரிழப்புகள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட பட்டியலில் இடம்பெறவில்லை.

கிருமி நாசினி தெளிப்பு

இதற்கிடையே, புள்ளம்பாடியில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இ.வெள்ளனூர் ஊராட்சியை சேர்ந்த வட்டார வறுமை ஒழிப்பு கூட்டமைப்பு குழு செயலாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சென்று வந்த, இ.வெள்ளனூர் கிராம சேவை மையம் மற்றும் புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

மேலும் ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள வறுமை ஒழிப்பு வாழ்வாதார அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் 3 நாள் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அந்த அலுவலகம் பூட்டப்பட்டது.

மேலும் செய்திகள்