மராட்டியத்தில் மேலும் 9,509 பேருக்கு கொரோனா 260 பேர் உயிரிழப்பு

மராட்டியத்தில் புதிதாக 9 ஆயிரத்து 509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 260 பேர் உயிரிழந்து உள்ளனர்.

Update: 2020-08-03 00:16 GMT
மும்பை,

மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதில் நேற்று மாநிலத்தில் 9 ஆயிரத்து 509 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 41 ஆயிரத்து 228 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 2 லட்சத்து 76 ஆயிரத்து 809 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 1 லட்சத்து 48 ஆயிரத்து 537 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமானவர்கள் சதவீதம் 62.74 ஆக உள்ளது.

இதேபோல மாநிலத்தில் மேலும் 260 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதுவரை 15 ஆயிரத்து 576 பேர் உயிரிழந்து உள்ளனர்.

நேற்று மாநிலத்தில் அதிகபட்சமாக புனே மாநகராட்சியில் 1,762 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 61 ஆயிரத்து 762 ஆகி உள்ளது. இதில் 1,507 பேர் பலியாகி உள்ளனர்.

இதேபோல பிம்பிரி சிஞ்வாட்டில் 734 பேருக்கும், நவிமும்பையில் 400 பேருக்கும், கல்யாண் டோம்பிவிலியில் 402 பேருக்கும், தானே மாநகராட்சியில் 282 பேருக்கும், ராய்காட்டில் 247 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முக்கிய பகுதிகளில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் மற்றும் அடைப்புகுறிக்குள் பலியானவர்கள் விவரம் வருமாறு:-

தானே மாநகராட்சி- 21,006 (734 பேர் பலி), தானே புறநகர்- 13,895 (344), நவிமும்பை மாநகராட்சி- 17,819 (461), கல்யாண், டோம்பிவிலி மாநகராட்சி- 23,347 (456), உல்லாஸ் நகர் மாநகராட்சி- 7,129 (162), பிவண்டி மாநகராட்சி- 3,864 (234), மிரா பயந்தர் மாநகராட்சி- 9,060 (283), வசாய் விரார் மாநகராட்சி- 12,441 (310), ராய்காட்- 9,901 (242), பன்வெல் மாநகராட்சி- 7,448 (164). நாசிக் மாநகராட்சி- 10,236 (274), புனே மாநகராட்சி- 61,762 (1,507), புனே புறநகர்- 10,522 (318), பிம்பிரி சிஞ்வாட் மாநகராட்சி- 22,627 (410). கோலாப்பூர்- 4,801 (80).

மேலும் செய்திகள்