கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரைக்கால் மீன்பிடி துறைமுகம் மூடல்

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில வாரமாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தற்போது 200-க்கும் மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2020-08-04 20:00 GMT
காரைக்கால்,

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில வாரமாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தற்போது 200-க்கும் மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மீனவ கிராமங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவுகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா, அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்தார்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, 10 நாட்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லமாட்டோம் என மீனவர்கள் அறிவித்தனர்.

அதன்படி, கடந்த 31-ந் தேதி முதல், காரைக்கால் மாவட்ட 11 மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. ஏற்கனவே சென்ற மீனவர்கள் நேற்று முன்தினம் கரை திரும்பினர். இதையடுத்து மீன்பிடி துறைமுகம் நேற்று மூடப்பட்டதால் மீன் ஏலக்கூடம் வெறிச்சோடி கிடந்தது. நேற்று 5-வது நாளாக மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால் மீன் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், அசைவ பிரியர்கள் கோழி, ஆட்டு இறைச்சி பக்கம் திரும்பியுள்ளனர்.

மேலும் செய்திகள்