செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 425 பேர் பாதிப்பு சாவு எண்ணிக்கை 302 ஆக உயர்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 425 பேர் பாதிக்கப்பட்டனர். 8 பேர் பலியானதால் சாவு எண்ணிக்கை 302 ஆக உயர்ந்தது.

Update: 2020-08-09 01:49 GMT
வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கூடலூர் கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 வயது சிறுமி, 9 வயது சிறுவன், 36 வயது பெண், 45 வயது ஆண் உள்பட 23 பேர், நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட ஊரப்பாக்கம் ஊராட்சியில் 6 பேர், கூடுவாஞ்சேரி பெரியார் ராமசாமி தெருவில் வசிக்கும் 24 வயது வாலிபர், கோவிந்தராஜபுரம் 2-வது தெருவை சேர்ந்த 1 சிறுமி, 2 சிறுவர்கள், காமராஜபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் 14 வயது சிறுமி, 33 வயது வாலிபர் உள்பட 45 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாயினர்.

ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பெருமாட்டுநல்லூர் அஷ்டலட்சுமி நகரை சேர்ந்த 48 வயது ஆண், அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த 67 வயது ஆண் உள்பட செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 425 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

மாவட்டம் முழுவதும் இதுவரை 17 ஆயிரத்து 411 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 14 ஆயிரத்து 420 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 2,689 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்தனர். இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 302 ஆக உயர்ந்தது.

படப்பை

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சி பகுதியை சேர்ந்த 24 வயது வாலிபர், 23 வயது இளம்பெண், கரசங்கால் பகுதியை சேர்ந்த 22 வயது வாலிபர், சாலமங்கலம் ஊராட்சி பகுதியை சேர்ந்த 36 வயது ஆண், 14 வயது சிறுவன் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 284 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 11 ஆயிரத்து 422 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 8 ஆயிரத்து 507 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 2,769 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 4 பேர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 146 ஆக உயர்ந்தது.

திருவள்ளூர்

திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 22 பேர், கடம்பத்தூர் ஒன்றியத்தில் 18 பேர் உள்பட திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 391 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 16 ஆயிரத்து 612 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 12 ஆயிரத்து 929 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

3,403 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 6 பேர் இறந்துள்ளனர். இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 280 ஆனது.

மேலும் செய்திகள்