கொரோனா சிகிச்சையை மேம்படுத்த வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கொரோனா சிகிச்சையை மேம்படுத்த வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

Update: 2020-08-11 23:55 GMT
காரைக்கால்,

காரைக்காலில் கொரோனா பரவலை தடுக்க அரசும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் தொற்று பரவல் கடந்த சில நாட்களாக வேகமெடுத்துள்ளது. மேலும் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது.

எனவே காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை முறையை மேம்படுத்தவேண்டும் என்று அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இதை வலியுறுத்தி காரைக்கால் அரசு பொது மருத்துவமனை முன் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமை தாங்கினார்.

காரைக்காலில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதியை அதிகரிக்கவேண்டும், புதுச்சேரி, மாகி, ஏனாம் பிராந்தியங்களில் தரமான உணவுடன் அசைவ உணவு வழங்குவதுபோல், காரைக்காலிலும் தரமான உணவு வழங்கவேண்டும். மருத்துவமனையில் கழிவறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மேலும் செய்திகள்