மாவட்டத்தில் 20 ஏக்கர் பரப்பில் தோட்டக்கலை பண்ணைக்கு இடத்தை தேர்வு செய்ய கலெக்டர் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் 20 ஏக்கர் பரப்பளவில் அரசு தோட்டக்கலை பண்ணை அமைக்கப்பட உள்ளது. இதற்கான இடத்தை தேர்வு செய்ய கலெக்டர் மெகராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2020-08-12 22:00 GMT
நாமக்கல், 

நாமக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்களான மா, பலா, சப்போட்டா, நெல்லி மற்றும் காய்கறி நாற்றுக்கள் உள்ளிட்ட தோட்டக்கலை செடிகள் உற்பத்தி செய்து, அவற்றை அதிகளவில் விளைவிக்க 20 ஏக்கர் பரப்பளவில் அரசு தோட்டக்கலை பண்ணை அமைக்க உள்ளது.

அரசு தோட்டக்கலை பண்ணை மூலம் உயர் விளைச்சல் தரக்கூடிய ஒட்டு கன்றுகள், தோட்டக்கலைத்துறை வல்லுனர்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட உள்ளன.

அரசு தோட்டக்கலை பண்ணை அமைப்பதற்கான இடத்தினை தேர்வு செய்வதற்காக கலெக்டர் மெகராஜ் சேந்தமங்கலம் தாலுகா உத்திரகிடிகாவல் அரசு கலைக்கல்லூரி மற்றும் பேளுக்குறிச்சி ஆகிய பகுதிகளில் இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஆய்வின்போது தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கண்ணன், உதவி இயக்குனர் யோகநாயகி, சேந்தமங்கலம் தாசில்தார் ஜானகி உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்