ராணிப்பேட்டை மாவட்ட எல்லையில் முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு

ராணிப்பேட்டை மாவட்ட எல்லையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2020-08-21 07:52 GMT
காவேரிப்பாக்கம்,

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும், கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவும் நேற்று வேலூர் மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை புரிந்தார்.

இதனையொட்டி ராணிப்பேட்டை மாவட்ட எல்லையான பொன்னியம்மன் பட்டறை சோதனை சாவடி அருகே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் கே.சி.வீரமணி, ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ., ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி, போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், மாநில சிறுபான்மை நலப்பிரிவு இணைச் செயலாளர் அ.முகமதுஜான் எம்.பி., ஜி.சம்பத் எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் இளம்பகவத், கோட்டாட்சியர் பேபி இந்திரா, தாசில்தார் ரேவதி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

கலந்துகொண்டவர்கள்

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. வி.கே.ஆர்.சீனிவாசன், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் ஏ.வி.சாரதி, வாலாஜா கிழக்கு ஒன்றிய செயலாளர் வி.கே.ராதாகிருஷ்ணன், நெமிலி ஒன்றிய செயலாளர் ஏ.ஜி.விஜயன், அரக்கோணம் ஒன்றிய செயலாளர்கள் இ.பாஸ்கர், ஜி.பழனி, அரக்கோணம் நகர வங்கி தலைவர் ஷியாம்குமார், அரக்கோணம் நகர செயலாளர் கே.பி.பாண்டுரங்கன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் கே.அன்பரசு, காவேரிப்பாக்கம் ஒன்றிய அ.தி.மு.க. பிரமுகர் சி.எஸ்.கே.குமரேசன், நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர் கே.வி.ஆர்.அருணாபதி, மாவட்ட பொருளாளர் ஆர்.ஷாபுதீன், ராணிப்பேட்டை நகர செயலாளர் என்.கே.மணி, மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் எஸ்.எம்.சுகுமார், வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் குப்பத்தாமோட்டூர் ஆனந்தன், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் கே.பி.சந்தோஷம், முன்னாள் நகரசபை தலைவர் சித்ரா சந்தோஷம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் வாலாஜா மேற்கு ஒன்றிய செயலாளர் பெல் ஆர்.தமிழரசன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அகோ.அண்ணாமலை, சோளிங்கர் மேற்கு ஒன்றிய செயலாளர் சோமநாதபுரம் எஸ்.சின்னதுரை, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் எஸ்.தம்சுத்தீன், ராணிப்பேட்டை நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கே.அசோகன், ராணிப்பேட்டை நகர எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் எம்.உமர்பாரூக், மெடிக்கல் வாசு, திமிரி மேற்கு ஒன்றிய செயலாளர் ந.வ.கிருஷ்ணன், மாவட்ட இணைச்செயலாளர் கீதா சுந்தர், திமிரி மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் கே.செல்வகுமார், செயலாளர் வி.ஜி.சரவணன், மேல்விஷாரம் நகர செயலாளர் ஏ.இப்ராஹிம் கலிலுல்லா, திமிரி ஒன்றிய பாசறை செயலாளர் பி.ரமேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

சோளிங்கர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.எல்.விஜயன், மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர் ஏ.கலைக்குமார், மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் கவிதா, மாவட்ட பாசறை துணைச் செயலாளர் மணிகண்டன், சோளிங்கர் வழக்கறிஞர் பிரிவு அருண் ஆதி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் என்.முனுசாமி, காவேரிப்பாக்கம் ஒன்றிய செயலாளர் டி.ராஜா, வாலாஜா நகர செயலாளர் டபிள்யூ.ஜி.மோகன், வாலாஜா நகரசபை முன்னாள் தலைவர் டபிள்யூ.எஸ்.வேதகிரி, வாலாஜா நகர ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் டி.எல்.ரமேஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கே.முல்லைவேந்தன், வாலாஜா நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் டி.ஆர்.பரத், நகர தலைவர் நந்தகுமார், திமிரி ஒன்றிய கிழக்கு செயலாளர் சொரையூர் எம்.குமார், கலவை பேரூர் செயலாளர் கே.ஆர்.சதீஷ், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் கே.பி.கே.அப்துல்லா மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் கட்சி நிர்வாகிகள், பிற அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்