மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் முனையம் ரூ.1,642 கோடி செலவில் புதுப்பிக்கப்படுகிறது

மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் முனையம் ரூ.1,642 கோடி செலவில் புதுப்பிக்கப்படுகிறது.

Update: 2020-08-24 23:33 GMT
மும்பை, 

மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் முனையம் யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பராம்பரிய கட்டிடமாகும். 130 ஆண்டுகள் பழமையான சி.எஸ்.எம்.டி. கட்டிடம் ஆங்கிலேயர்களால் விக்டோரியன் கோதிக் வடிவில் ரூ.16 லட்சம் செலவில் கட்டப்பட்டதாகும்.

தற்போது இந்த கட்டிடம் பாரம்பரியம் மாறாமல் ரூ.1,642 கோடி செலவில் புதுப்பிக்கப்பட உள்ளது. மேலும் இந்த திட்டத்தின்கீழ் சி.எஸ்.எம்.டி.யில் உள்ள பல ரெயில்வே அலுவலங்கள் பைகுல்லா மற்றும் வாடிபந்தர் பணிமனைக்கு மாற்றப்பட உள்ளது.

முதல் கட்ட அனுமதி

மேலும் இந்த திட்டம் குறித்து இந்திய ரெயில் நிலைய மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக இயக்குனர் சஞ்சீவ் குமார் லோகியா கூறியதாவது:-

சி.எஸ்.எம்.டி. பாரம்பரிய கட்டிடம் என்பதால் அதன் பழமை மாறாமல் அப்படியே புதுப்பிப்பதே எங்களின் முக்கிய நோக்கம். 1950-களில் உள்ளது போல கட்டிடம் புதுப்பிக்கப்படும். இந்த திட்டத்துக்கு பொது, தனியார் கூட்டு மதிப்பீடு கமிட்டி ஒப்புதல் வழங்கி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்