வீடுகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

வீடுகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை பொதுமக்கள் கடலில் கரைத்தனர்.

Update: 2020-08-25 01:01 GMT
புதுச்சேரி, 

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 22-ந்தேதி கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின்போது பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபடவும், விநாயகர் சிலை ஊர்வலத்துக்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த தடையால், வழக்கமாக விநாயகர் சதுர்த்தி விழா பேரவை சார்பில் வைக்கப்படும் சிலைகள் எதுவும் வைக்கப்படவில்லை. அதே நேரத்தில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டனர்.

கடலில் கரைப்பு

வழிபாடு முடிந்து 3-வது நாளான நேற்று தங்கள் வீடுகளில் வைத்திருந்த சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை கரைக்க திட்டமிட்டனர். அதன்படி விநாயகர் சிலைகளை கடற்கரைக்கு எடுத்துவந்தனர். அங்கு பூஜை செய்து, கடலில் கரைத்தனர்.

புதுவை கடற்கரை, வம்பாகீரப்பாளையம் கடற்கரை, வீராம்பட்டினம் கடற்கரையில் ஏராளமானவர்கள் தாங்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை கரைத்தனர்.

மேலும் செய்திகள்