கடலூருக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு

கடலூருக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

Update: 2020-08-27 22:00 GMT
கடலூர், 

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்து கொரோனா நோய் தடுப்பு மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். முன்னதாக அவர் சென்னையில் இருந்து நேற்று காலை 7 மணி அளவில் புறப்பட்டு புதுச்சேரி மாநிலம் வழியாக கடலூர் மாவட்ட எல்லையான ரெட்டிச்சாவடிக்கு வந்தார். அங்கு அவருக்கு தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் அ.தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன், நகர செயலாளர் குமரன், ஒன்றிய செயலாளர்கள் பழனிசாமி, கோவிந்தராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சேவல்குமார், நகர துணை செயலாளர் கந்தன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் மதியழகன், முன்னாள் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ராமலிங்கம், இளைஞர் அணி தலைவர் கெமிக்கல் மாதவன், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் காசிநாதன், கே.எஸ்.கார்த்திகேயன், வக்கீல் பிரிவு துணைத்தலைவர் ராஜசேகர், முன்னாள் தொகுதி செயலாளர் வெங்கடாஜலபதி, ஒன்றியக்குழு தலைவர் கலையரசி கோவிந்தராஜ், பேரூர் செயலாளர் வடலூர் பாபு, ஒன்றிய கவுன்சிலர் குமுதம் சேகர், நிர்வாகிகள் வசந்தராஜ், ராஜேந்திரன், வக்கீல் ஆனந்த், கோண்டூர் கணேஷ், 18-வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் கிரிஜா செந்தில்குமார், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், மாநில மருத்துவர் அணி தலைவர் டாக்டர் சீனுவாச ராஜா, ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆலப்பாக்கம் வீரமணி, குறிஞ்சிப்பாடி ஒன்றிய பொதுக்குழு உறுப்பினர் காமராஜ், முன்னாள் நகர மன்றத் தலைவரும், பண்ருட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வத்தின் கணவருமான ம.ப.பன்னீர்செல்வம், அண்ணாகிராமம் ஒன்றியக்குழு தலைவர் வ.ஜானகிராமன், கடலூர் மத்திய மாவட்ட மாணவரணி செயலாளர் பொறியாளர் எஸ்.கலையரசன், தொரப்பாடி பேரூராட்சி மன்ற முன்னாள் துணை தலைவரும், பேரூர் செயலாளருமான டி.கனகராஜ், புதுப்பேட்டை வக்கீல் ஆனந்த், அண்ணாகிராமம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பாபு புஷ்பராஜ், பண்ருட்டி நகர அ.தி.மு.க. செயலாளர் தாடி முருகன், கூட்டுறவு சங்க தலைவர் ராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்