32 இடங்களில் ஊரடங்கு தொடர்பாக ஆலோசனை - அமைச்சர் ஷாஜகான் தலைமையில் நடந்தது

புதுவையில் 32 இடங்களில் உள்ளூர் ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக அமைச்சர் ஷாஜகான் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2020-08-29 00:48 GMT
புதுச்சேரி,

புதுவையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 32 இடங்களில் வருகிற 31-ந்தேதி முதல் செப்டம்பர் 6-ந்தேதி வரை 7 நாட்கள் உள்ளூர் ஊரடங்கை அமல்படுத்த கலெக்டர் அருண் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் அருண், அரசு செயலாளர் பங்கஜ்குமார் ஜா, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரதிக்‌ஷா கோத்ரா, சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார், உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி மற்றும் சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் ஊரடங்கின்போது அரசு தரப்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், மருத்துவம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக தடுப்புகள் அமைப்பது, காய்ச்சல் முகாம்கள் நடத்துவது தொடர்பாக அதிகாரிகள் எவ்வாறு செயல்படுவது என்று விளக்கப்பட்டது.

மேலும் செய்திகள்