மானூர் அருகே மொபட் விபத்தில் தூய்மை பணியாளர் பலி

மானூர் அருகே சாலையில் மொபட் கவிழ்ந்த விபத்தில் தூய்மை பணியாளர் உயிரிழந்தார்.

Update: 2020-08-30 22:15 GMT
மானூர்,

மானூர் அருகே உள்ள வடக்கு வாகைக்குளத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 49). இவர் நெல்லை மாநகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று அதிகாலை 5 மணி அளவில் தனது மொபட்டில் வேலைக்கு புறப்பட்டார்.

அப்போது அவர் தன்னுடைய உறவினரான எட்வின் (18) என்பவரையும் மொபட்டில் அழைத்து சென்றார். மானூர் அருகே சேதுராயன்புதூர் பஸ் நிறுத்தம் அருகில் சென்றபோது, சாலையின் குறுக்காக நாய் பாய்ந்து ஓடியது.

இதனால் நிலைதடுமாறிய மொபட் சாலையில் கவிழ்ந்தது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். எட்வின் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். உடனே அவரை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், மானூர் போலீசார் விரைந்து சென்று, ராமச்சந்திரனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்