ஜெயபுரம் ஏரியிலிருந்து மண் கடத்த முயன்ற அரசு பள்ளி ஆசிரியர் உள்பட 6 பேர் கைது - 4 டிராக்டர்கள், பொக்லைன் எந்திரம் பறிமுதல்

ஜெயபுரம் ஏரியிலிருந்து மண் கடத்த முயன்ற அரசு பள்ளி ஆசிரியர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 டிராக்டர்கள், பொக்லைன் எந்திரங்களையும் பறிமுதல் செய்தனர்.

Update: 2020-08-31 22:00 GMT
திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே ஜெயபுரம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் மேகநாதன் (யது 42) என்பவர் ஜெயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். கொரானா விடுமுறையையொட்டி வீட்டில் இருந்த அவர் மண் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் இரவு நேரத்தில் ஜெயபுரம் ஏரியில் 4 டிராக்டர் வைத்து பொக்லைன் எந்திரம் மூலம் அவர் உள்பட 6 பேர் மண் அள்ளுவதாக கந்திலி போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் கந்திலி போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் ஏரிக்கு விரைந்து சென்று அனுமதியின்றி மண் அள்ளிக் கொண்டிருந்த ஆசிரியர் மேகநாதன் மற்றும் டிரைவர்கள் வெங்கடேசன் (வயது 24), சபரி (25), சுதாகர் (26), அர்ஜுனன் (25),சுகுமார் (26) ஆகிய 6 பேரை கைது செய்து மண் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்