காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவில் ராஜ கோபுர உச்சியில் ஒரு மணி நேரமாக அமர்ந்திருந்த மயில்

காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவில் ராஜ கோபுர உச்சியில் ஒரு மணி நேரமாக அமர்ந்திருந்த மயில்.

Update: 2020-09-03 00:41 GMT
காஞ்சீபுரம்,

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள கோவில்களில் பக்தர்கள் அனுமதி ரத்து செய்யப்பட்டு பூஜைகள் மட்டும் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு தளர்வு நடவடிக்கையாக தமிழக அரசு கோவில்களை திறக்க அனுமதி அளித்தது.

காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவில் நேற்று முன்தினம் திறக்கப்பட்டதையொட்டி அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். ராகு-கேது பெயர்ச்சியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மாலை 6.30 மணியளவில் 75 அடி உயரமுள்ள கோவில் ராஜகோபுர உச்சியில் உள்ள கலசத்தின் மீது மயில் ஒன்று ஒரு மணி நேரமாக அமர்ந்து இருந்தது. சாமி தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் இதை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

மேலும் செய்திகள்