நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தொடர்ந்து போராடுவோம்- உதயநிதி ஸ்டாலின் பேட்டி

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தொடர்ந்து போராடுவோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Update: 2020-09-12 22:45 GMT
ஆலந்தூர், 

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு சென்றார். முன்னதாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரையில் நீட் தேர்வுக்கு பயந்து மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா, தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதற்கு முழுக்க முழுக்க மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசும், மாநிலத்தில் ஆளும் அ.தி.மு.க. அரசும்தான் காரணம். கடந்த 4 ஆண்டுகளில் 10 பேர் தற்கொலை செய்து உள்ளனர். எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஏற்கனவே தி.மு.க. இளைஞரணி, மாணவரணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யகோரி போராட்டம் நடத்தப்பட்டது. இனியும் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். நாளை(அதாவது இன்று) நடக்க உள்ள நீட் தேர்வை மாணவர்கள் தைரியமாக எழுதுங்கள். 8 மாதத்தில் கண்டிப்பாக உங்களுக்கு விடிவு காலம் பிறக்கும்" என்றார்.

மேலும் செய்திகள்