கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜனதா போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜனதா நிச்சயம் போட்டியிடும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Update: 2020-09-13 18:23 GMT
தூத்துக்குடி,

மாணவர்களின் தற்கொலைகளை நீட் தேர்வுடன் தொடர்புபடுத்தி கூறுவது எதிர்மறையான எண்ணங் களை விதைக்கும். எனவே எந்த தேர்வாக இருந்தாலும், அதை சந்திக்கின்ற மன தைரியத்தை வளர்க்கும் வகையில், நேர்மறையான எண்ணங்களை மாணவர்களுக்கு வழங்கும் முயற்சிகளை எடுக்க வேண்டும்.

மத்திய அரசின் கிசான் திட்ட முறைகேடுகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதற்கு தமிழக அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. நிச்சயம் போட்டியிடும். தேசிய தலைமையின் முடிவின்படி, வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் முதல்-அமைச்சராகும் கனவானது, வெறும் பகல் கனவாகத்தான் இருக்கும். அவரது கனவு, பகல் கனவாகவே இருப்பதற்கு இறைவன் அருள்புரிய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

செயற்குழு கூட்டம்

முன்னதாக தூத்துக்குடி தனியார் விடுதியில் பா.ஜனதா தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம், மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமையில் நடந்தது. முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்