இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ராமேசுவரத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-09-14 05:15 GMT
ராமேசுவரம், 

ராமேசுவரத்தில் நேற்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மருத்துவராக நினைக்கும் மாணவர்களின் கனவை பறிக்கும் விதமாக உள்ள நீட் தேர்வை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வால் மனம் உடைந்து கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தில் தற்கொலை செய்த 3 மாணவர்களின் குடும்பத்திற்கு அரசு தலா ரூ. 50 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும்.

நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தாமல் மவுனமாக இருக்கும் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கி கண்டனத்தை தெரிவித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தாலுகா செயலாளர் கார்த்திக் மற்றும் மாவட்ட தலைவர் மாரிமுத்து, கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் சிவா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருணாகரன், நிர்வாகிகள் அசோக், கருணாமூர்த்தி, ஆரோக்கிய நிர்மலா, வில்லியம்சாய்சி, முத்துப்பாண்டி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்