குடியாத்தம், ஜோலார்பேட்டை, கே.வி.குப்பம், ராணிப்பேட்டையில் - 48 பேருக்கு கொரோனா

குடியாத்தம், ஜோலார்பேட்டை, கே.வி.குப்பம், ராணிப்பேட்டையில் 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-09-14 06:45 GMT
ராணிப்பேட்டை, 

குடியாத்தம் தாலுகா பகுதிகளில் கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளது. நேற்று வந்த கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகளில் குடியாத்தம் அம்பாபுரம், புவனேஸ்வரிபேட்டை, தரணம்பேட்டை, புதுப்பேட்டை, சந்தப்பேட்டை, காந்திநகர், கொண்டசமுத்திரம், அக்ராவரம், மீனாட்சிஅம்மன் நகர், கூடநகரம், செட்டிகுப்பம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர், பரதராமியில் 2 பேர் என 13 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களை மருத்துவக்குழுவினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஜோலார்பேட்டை அருகே இடையம்பட்டியை சேர்ந்த 2 பேருக்கும், சந்தைக்கோடியூரை சேர்ந்த ஒருவருக்கும், ஜோலார்பேட்டையை சேர்ந்த 2 பேருக்கும், தென்றல் நகரை சேர்ந்த ஒருவருக்கும், இந்திரா நகரை சேர்ந்த ஒருவருக்கும், பாச்சல் ஜெய்பீம்நகரை சேர்ந்த ஒருவருக்கும் சின்னமூக்கனூரை சேர்ந்த ஒருவருக்கும் சின்ன வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் ஆகிய 10 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது

தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி ஊராட்சி துறை சார்ந்த பணியாளர்கள் பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்காக திருப்பத்தூர் மற்றும் நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கே.வி.குப்பம் மேல்மாயில் ரோடு, சந்தைமேடு பகுதியில் 3 பேர், வேப்பங்கநேரியில் 69 வயது முதியவர், கவசம்பட்டில் 53 வயது பெண், லத்தேரியில் 2 பேர், பெருமாங்குப்பம் பகுதியில் 17 வயது இளம்பெண் ஆகிய 8 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.

ராணிப்பேட்டை ஜெயமணி தெருவைச் சேர்ந்த 48 வயது பெண், 51 வயது ஆண், தியாகி மாணிக்க நாயகர் தெருவைச் சேர்ந்த 58 வயது ஆண், நவல்பூர் அருகே ஏ.வி.எம். தெருவைச் சேர்ந்த 28 வயது ஆண், முத்துக்கடை பகுதியைச் சேர்ந்த 24 வயது ஆண், 40 வயது ஆண், மாந்தாங்கல் கணபதி நகர் பகுதியைச் சேர்ந்த 53 வயது ஆண் ஆகிய 7 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

சிப்காட் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த 43 வயது பெண், இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த 36 வயது பெண், இண்டஸ்டிரியல் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த 55 வயது ஆண், சீக்கராஜபுரம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 42 வயது ஆண், பாடசாலை தெருவைச் சேர்ந்த 36 வயது பெண், 13 வயது ஆண், மணியம்பட்டு பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த 44 வயது பெண், லாலாபேட்டை பஜார் வீதியைச் சேர்ந்த 37 வயது ஆண், அக்ராவரம் மலைமேடு பகுதியைச் சேர்ந்த 33 வயது ஆண் ஆகிய 9 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

அம்மூரை அடுத்த கல்மேல்குப்பம் பகுதியைச் சேர்ந்த 21 வயது வாலிபரும் தொற்றுக்கு ஆளானார். பாதிக்கப்பட்டவர்கள் அரசு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்