நெல்லை அருகே தேசிய ஊரக தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை

நெல்லை அருகே தேசிய ஊரக தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

Update: 2020-09-14 22:30 GMT
நெல்லை,

தமிழகத்தில் கொரோனோ பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் 11 ஆயிரத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பணியாற்றும் தேசிய ஊரக தொழிலாளர்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதையடுத்து நெல்லை மாவட்டத்தில் தேசிய ஊரக தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

அதன்படி ஒவ்வொரு யூனியனிலும் கிராம பஞ்சாயத்துகள் தோறும் தேசிய ஊரக தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.

நெல்லை பாளையங்கோட்டை யூனியனுக்கு உட்பட்ட கீழப்பாட்டம் பஞ்சாயத்து பகுதியில் பணியாற்றும் தேசிய ஊரக தொழிலாளர்களுக்கு நேற்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதற்காக தேசிய ஊரக தொழிலாளர்கள் பணி செய்யும் இடத்துக்கே சுகாதார பணியாளர்கள் நடமாடும் வாகனத்தில் சென்றனர். அங்கு 100-க்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

தேசிய ஊரக தொழிலாளர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்