மரத்தில் கார் மோதியது: ஊராட்சி துணைத் தலைவர் உள்பட 10 பேர் படுகாயம்

சீர்காழி அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் ஊராட்சி துணைத் தலைவர் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2020-09-16 01:44 GMT
சீர்காழி,

சீர்காழி அருகே எடக்குடிவடபாதி கிராமத்தை சேர்ந்தவர் நந்தகுமார்(வயது62). ஊராட்சி துணை தலைவர். இவரது மனைவி பபிதா(52), மகன்கள் தினேஷ்குமார்(25), மகேஷ்குமார்(21), உறவினர்கள் சுமத்திராதேவி(31), கலைசெல்வி(40), விமல்ராஜ் (17), செல்வகண்ணன் (11) , செல்வபிரியா(9) ஆகியோர் ஒரு காரில் வேலூர் மாவட்டத்துக்கு ஒரு துக்க நிகழ்ச்சிக்காக நேற்று புறப்பட்டு சென்றனர். காரை எடக்குடிவடபாதி கிராமம் மேலகரைமேடு கிராமத்தை சேர்ந்த சேகர் ஓட்டி சென்றார்.

படுகாயம்

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் அட்டகுளம் பகுதியில் கார் சென்ற போது எதிர்பாராமல் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது அதிவேகமாக மோதியது. இதில் காரில் பயணம் செய்த நந்தகுமார், அவரது மனைவி, மகன்கள் உள்ளிட்ட 10 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வைத்தீஸ்வரன்கோயில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்