நடிகர் சூர்யாவுக்கு நீதிமன்றத்தை அவமதிக்கும் எண்ணமில்லை நாராயணசாமி கருத்து

நடிகர் சூர்யாவுக்கு நீதிமன்றத்தை அவமதிக்கும் எண்ணம் இல்லை என்று நாராயணசாமி தெரிவித்தார்.

Update: 2020-09-16 23:46 GMT
புதுச்சேரி,


முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நீட் தேர்வு அழுத்தம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ள போதிலும் அதற்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. மாநிலங்களின் எண்ணங்களை ஏற்காமல் செயல்படுவது நல்லதல்ல.

தமிழகம், புதுச்சேரியில் மாணவர்களுக்கு நீட் தேர்வு தேவையில்லை என்று நான் பல சமயங்களில் வலியுறுத்தி உள்ளேன். நீட் தேர்வு தொடர்பாக நடிகர் சூர்யா ஒரு கருத்தை கூறியுள்ளார். எந்தவித உள்நோக்கமும் இல்லாமல் அவர் பேசி உள்ளார். அது எதார்த்தமானது. நீதிமன்றம் அதை பெரிதுபடுத்தக்கூடாது. மாணவர்களின் உயிர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பேசி உள்ளார். அதில் உள்நோக்கம் இல்லை. அவர் நீதிமன்றத்தை அவமதிக்கும் நோக்கத்தில் பேசவில்லை. நீதியரசர்கள் இதை விட்டுவிடவேண்டும். மக்கள் உணர்வுகளை பிரதிபலிப்பது அரசியல்வாதிகள், பொதுநலவாதிகளின் எண்ணம். நாட்டில் பேச்சு, எழுத்து சுதந்திரம் உள்ளது.

நடிகர் சூர்யாவுக்கு நீதிமன்றத்தை அவமதிக்கும் எண்ணம் இல்லை. அவர் பேசியதை பொருட்டாக கருதக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்