ஊட்டியில் அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகளை கலெக்டர் ஆய்வு

ஊட்டியில் அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2020-09-17 16:15 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் உள்பட அனை த்து தரப்பினரும் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர். இதையொட்டி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் கடந்த 10-7-2020-ந் தேதி ஊட்டியில் 40 ஏக்கர் பரப்பளவில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க அடிக்கல் நாட்டினார்.

இதற்காக ரூ.141 கோடியே 30 லட்சம் செலவில் மருத்துவ கல்லூரி கட்டிடங்களும், ரூ.130 கோடியே 27 லட்சம் செலவில் மருத்துவமனை கட்டிடங்களும், குடியிருப்புகள் மற்றும் விடுதி கட்டிடங்கள் கட்டுவதற்கு ரூ.175 கோடியே 75 லட்சம் என மொத்தம் ரூ.447 கோடியே 32 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. பின்னர் பணிகளும் உடனடியாக தொடங்கப்பட்டது.

இப்பணியை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் சென்று நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கட்டுமான பணிகளை விரைவாகவும், தரமாகவும் மேற்கொள்ள வேண்டும். இதற்காக கூடுதல் பணியாளர்களை நியமிக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து வரைபடங்களின்படி பணிகள் நடைபெறுகிறதா என அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதேபோல் பல இடங்களில் ஆய்வு நடத்தினார். ஆய்வின் போது உதவி செயற்பொறியாளர் ரமேஷ், பொதுப்பணித்துறை (மருத்துவம்) உதவி பொறியாளர்கள் அழகப்பன், சாந்தி மற்றும் அரசு பல்வேறு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்