நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை வாலிபர் சங்கத்தினர் முற்றுகை

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவகத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-09-20 02:05 GMT
திருவாரூர்,

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜோதிபாசு தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சலாவுதீன், மாவட்ட பொருளாளர் இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் விஜய், ஜான் கென்னடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வின் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பத் தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் அவர்களுடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப் பட்டன.

தள்ளு, முள்ளு

முற்றுகை போராட்டம் காரணமாக கலெக்டர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது. அலுவலக வாசல் கதவு மூடப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந் தன.

இந்த நிலையில் போராட்டத் தில் ஈடுபட்டவர்கள் திடீரென தடுப்புகளை தாண்டி கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்ல முயன்றதால் அவர் களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்