மாவட்டத்தில் நடமாடும் ரேஷன் கடைகள் சேவை - அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

நாமக்கல் மாவட்டத்தில் நடமாடும் ரேஷன் கடைகள் சேவையை அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Update: 2020-09-22 22:45 GMT
பள்ளிபாளையம், 

பள்ளிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட எலந்தகுட்டை ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளிகுட்டை பகுதியில் நடமாடும் ரேஷன் கடை சேவை தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார்.

இதில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு நடமாடும் ரேஷன் கடை வாகன சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மேலும் அவர்கள் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினர். இதேபோல் களியனூர் ஊராட்சியிலும் நடமாடும் ரேஷன் கடைகள் சேவையை அமைச்சர்கள் தொடங்கி வைத்து, பொருட்கள் வழங்கினர்.

பின்னர் பள்ளிபாளையம் ஒன்றிய அலுவலகத்தில் நடந்த விழாவில் பணிக்கு செல்லும் 70 பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனங்களை அமைச்சர்கள் வழங்கினர்.

இந்த விழாவில் உதவி கலெக்டர் மணிராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செந்தில், வடக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், பள்ளிபாளையம் நகராட்சி முன்னாள் தலைவர் வெள்ளிங்கிரி, முன்னாள் துணை தலைவர் சுப்பிரமணி, ஆணையாளர் இளவரசன், ஆனங்கூர் ஊராட்சி தலைவர் சிங்காரவேல், எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகள் வேல்முருகன், முகிலன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்