குற்றாலத்தில் பேரிடர் மீட்பு ஒத்திகை தீயணைப்பு துறை சார்பில் நடத்தப்பட்டது

தமிழகம் முழுவதும் தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் காலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.

Update: 2020-09-23 03:43 GMT
தென்காசி,

தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனை முன்னிட்டு தமிழக தீயணைப்பு துறை இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் காலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி குற்றாலத்தில் உள்ள படகு குழாமில் இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் மகாலிங்க மூர்த்தி தலைமை தாங்கினார். உதவி அலுவலர் சுரேஷ் ஆனந்த், தென்காசி தாசில்தார் சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிலைய அலுவலர்கள் ரமேஷ், வீரராஜ், போக்குவரத்து அலுவலர் சுந்தரராஜன், ஏட்டுகள் கணேசன், செல்வம், தீயணைப்பு படை வீரர்கள், நீச்சல் பயிற்சி பெற்ற வீரர்கள், ஆம்புலன்ஸ் பணியாளர்கள், செஞ்சிலுவை சங்கத்தினர் ஆகியோர் இந்த ஒத்திகையில் ஈடுபட்டனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது எப்படி? என்பது உட்பட பல்வேறு செயல் முறை விளக்கங்கள் காட்டப்பட்டன.

மேலும் செய்திகள்