ஆண்டிப்பட்டியில் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2020-09-24 04:27 GMT
ஆண்டிப்பட்டி,

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு குழுவின் மாநில நிர்வாகி அன்பழகன் தலைமை தாங்கினார். தேனி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும், கல்வி, வேலைவாய்ப்பில் உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும், இட அடிப்படையான உரிமைகளை திருத்த வேண்டும், ஓ.பி.சி. பிரிவு மக்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் வீரணன், ஒன்றிய தலைவர் தவமணி, மாவட்ட பொருளாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மேலும் செய்திகள்