கொரோனா விதியை மீறியதாக பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் மீது வழக்கு

கொரோனா விதியை மீறி கூட்டத்தை கூட்டியதாக பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-09-24 05:06 GMT
நாகர்கோவில்,

தமிழக பா.ஜனதா மாநில தலைவர் முருகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு குமரி மாவட்டம் வந்தார். அவருக்கு பா.ஜனதா சார்பில் ஆரல்வாய்மொழி அருகே உள்ள முப்பந்தலில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் தக்கலையை அடுத்த பருத்திக்காட்டுவிளையில் நடந்த பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் கூட்டத்தில் சட்டவிரோதமாக கூடியதாகவும், கொரோனா தொற்றுநோய் பரவும் என்றே தெரிந்திருந்தும் கூடியதாக பா.ஜனதா கட்சியினர் மீது தக்கலை மற்றும் ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பொன்.ராதாகிருஷ்ணன் மீது வழக்கு

அதன்படி கொரோனா விதிமுறையை மீறியதாக ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தென்மண்டல பொறுப்பாளர் நயினார் நாகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும், தக்கலை போலீஸ் நிலையத்தில் மாநில வர்த்தகர் அணி செயலாளர் ரெஜின் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்