பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேடு; இதுவரை ரூ.72 கோடி மீட்பு தஞ்சையில், அமைச்சர் துரைக்கண்ணு பேட்டி

பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேடு தொடர்பாக இதுவரையில் ரூ.72 கோடி மீட்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் துரைக்கண்ணு கூறினார்.

Update: 2020-09-25 02:54 GMT
தஞ்சாவூர்,

கொரோனா காலக்கட்டத்தில் சில இடைத்தரகர்கள், கம்ப்யூட்டர் சென்டர்கள் மூலம் பிரதமர் கிசான் திட்டத்தில் சில முறைகேடுகள் நடந்து அது கண்டறியப்பட்டு அந்த பணம் மீட்கப்பட்டு அரசு வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. அரசுத்துறை மட்டும் அல்ல கலெக்டர்கள், வேளாண்மைத்துறையினர், வருவாய்த்துறையினர் அனைவரும் ஒன்று சேர்ந்தும், இது தொடர்பான வழக்கு காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டு அவர்களும் சேர்ந்து இதுவரை ரூ.72 கோடி மீட்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு பாதிப்பில்லை

தவறாக பெறப்பட்ட தொகையை திரும்ப பெற கடுமையான நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. போலீசார் மூலம் கைது நடவடிக்கை செய்யப்பட்டுள்ளது. துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பலர் பணி நீக்கமும், தற்காலிக பணி நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதன் மூலம் பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேடுகள் களையப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாக்களால் விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது. அதனால் தான் தமிழக அரசு அதனை ஆதரிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்