வேளாண் மசோதாவை கண்டித்து சேலத்தில் சட்ட நகலை கிழித்து போராட்டம்

மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்ட மசோதாவை கண்டித்து சேலத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் சட்ட நகலை கிழித்து எறியும் போராட்டம் நேற்று நடைபெற்றது.

Update: 2020-09-25 04:46 GMT
சேலம்,

மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்ட மசோதாவை கண்டித்து சேலத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் சட்ட நகலை கிழித்து எறியும் போராட்டம் நேற்று நடைபெற்றது. சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்ட தலைவர் அப்சர் அலி தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் சையத் அலி, தொழிற்சங்க நிர்வாகி அப்துல், பகுதி நிர்வாகிகள் நவாஸ், பக்கூர், சையத், அப்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் வேளாண் திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதைத்தொடர்ந்து மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்ட நகல்களை எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கிழித்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சட்ட நகல்களை பறித்து அப்புறப்படுத்தினர்.

மேலும் செய்திகள்