என் குடும்பம், எனது பொறுப்பு திட்டம் ‘பொது மக்களை ஆரோக்கியமாக்கும்’ முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நம்பிக்கை

என் குடும்பம், எனது பொறுப்பு திட்டம் பொதுமக்களை ஆரோக்கியமாக்கும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

Update: 2020-09-25 22:41 GMT
மும்பை,

கொங்கன் மற்றும் புனே மண்டலங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:-

கொங்கன் மண்டலத்தில் என் குடும்பம், எனது பொறுப்பு திட்டத்தின் கீழ் 10.63 லட்சம் குடும்பங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. புனேயில் 182 கிராமங்கள் மற்றும் 13 நகராட்சி பகுதிகளில் ஆய்வு நடந்து உள்ளது. இந்த ஆய்வு புனேயில் உள்ள தொழிற்சாலைகள், குடியிருப்பு சொசைட்டிகளிலும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

தற்போது நாம் 2 விதமான மக்களை சந்திக்கிறோம். ஒருவர் கொரோனாவுக்கு மிகவும் பயப்படுபவர்கள், மற்றவர்கள் தொற்று பரவலை மிகவும் அலட்சியமாக எடுத்து கொள்பவர்கள். அறிகுறி இல்லாமல் பாதிக்கப்படும் நபர்களால் தொற்று அதிகம் பரவுகிறது. மராட்டிய அரசின் என் குடும்பம், எனது பொறுப்பு திட்டம் மாநிலத்தின் சுகாதார வரைபடத்தை உருவாக்கும். மேலும் பொதுமக்களை ஆரோக்கியமாக்கும்.  இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்