வேலைக்காக பலர் வெளியே வந்து உள்ளதால் கொரோனா பரவல் 2-வது அலை பற்றிய பயம் நிலவுகிறது முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேச்சு

வேலைக்காக பலர் வெளியே வந்து உள்ளதால் கொரோனா பரவல் 2-வது அலை பற்றிய பயம் நிலவுவதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

Update: 2020-09-26 23:58 GMT
மும்பை,

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மரத்வாடா மற்றும் நாசிக் மண்டலங்களை சேர்ந்த அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

அதிகாரிகள் முககவசம் அணிதல் போன்ற அரசின் வழிகாட்டுதல்களை பொது மக்கள் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

இங்கிலாந்தில் அறிகுறி இல்லாமல் தொற்று பாதித்தவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுகின்றனர். ஆனால் அவர்கள் தினந்தோறும் சோதிக்கப்படுகின்றனர். நாமும் அறிகுறியற்ற தொற்று பாதித்தவர்களை வீட்டிலேயே இருக்க அனுமதித்து உள்ளோம். ஆனால் அவர்கள் வெளியே சென்று மற்றவர்களுக்கும் தொற்றை பரப்புகின்றனர்.

பொது மக்கள் பலர் வேலைக்காக வெளியே வந்துள்ளதால், கொரோனா பரவல் 2-வது அலை பற்றிய பயம் நிலவி வருகிறது. முதியவர்கள் தொற்றால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பொது மக்களிடம் அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சோதனை, கண்டறிதலை அதிகப்படுத்த வேண்டும். என் குடும்பம், எனது பொறுப்பு திட்டம் இந்த விவகாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும். இந்த பிரசாரம் நாட்டிற்கு மட்டுமின்றி உலகிற்கே ஆரோக்கிய இயக்கமாக மாறும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்