ராகுல்-பிரியங்கா காந்தி மீதான தாக்குதலை கண்டித்து பெங்களூருவில் காங்கிரஸ் தலைவர்கள் ஆர்ப்பாட்டம்

ராகுல்-பிரியங்கா காந்தி மீதான தாக்குதலை கண்டித்து பெங்களூருவில் காங்கிரஸ் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் உ.பி.அரசுக்கு எதிராக கோஷம்.

Update: 2020-10-01 21:48 GMT
பெங்களூரு,

உத்தரபிரதேச மாநிலத்தில் 4 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்ட 19 வயது இளம்பெண், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடலை போலீசார் இரவோடு இரவாக தகனம் செய்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இளம்பெண் கற்பழித்து கொல்லப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கற்பழித்து கொல்லப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற அவரது சொந்த கிராமத்திற்கு நேற்று அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோர் சென்றனர். அப்போது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை தடுத்த உத்தர பிரதேச போலீசார் அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ராகுல், பிரியங்கா காந்தி மீதான தாக்குதலை கண்டித்து நேற்று பெங்களூரு டவுன் ஹால் முன்பு காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது ராகுல், பிரியங்கா காந்தி மீதான போலீசாரின் தாக்குதலை கண்டித்தும், உத்தர பிரதேச அரசுக்கு எதிராகவும் காங்கிரஸ் தலைவர்கள் கோஷம் எழுப்பினர்.

மேலும் செய்திகள்