நீச்சல்குளங்கள், தியேட்டர்களை திறக்க அனுமதி: மத்திய அரசின் முடிவுக்கு மந்திரி சி.டி.ரவி வரவேற்பு

நீச்சல் குளங்கள், தியேட்டர்களை திறக்கும் முடிவுக்கு மந்திரி சி.டி.ரவி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Update: 2020-10-01 21:59 GMT
பெங்களூரு,

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் 5-வது கட்ட தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. இதில் திரையரங்குகள், நீச்சல் குளங்கள் உள்ளிட்டவற்றை திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இது குறித்து சுற்றுலா மற்றும் கன்னட வளர்ச்சித்துறை மந்திரி சி.டி.ரவி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மத்திய அரசு 5-வது கட்ட தளர்வுகளை அறிவித்துள்ளது. அதில் தியேட்டர்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்டவற்றை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீச்சல் குளங்களில் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் போது மிகுந்த பாதுகாப்புடன் செயல்பட வேண்டும். உங்களின் பாதுகாப்பு உங்களின் கைகளில் உள்ளது என்பதை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல் தியேட்டர்களில் சமூக இடைவெளியை உறுதிப்படுத்த 50 சதவீத இருக்கைகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வரவேற்கிறேன்

மத்திய அரசின் இந்த இரண்டு முடிவுகளை வரவேற்கிறேன். தியேட்டர்களில் பொதுமக்கள் சினிமா பார்க்கும்போது மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல் போன்றவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு மந்திரி சி.டி.ரவி கூறினார்.

மேலும் செய்திகள்