செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 343 பேருக்கு கொரோனா தொற்று

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 343 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

Update: 2020-10-05 23:22 GMT
வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 3 பேர், நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராம பகுதியில் 15 பேர், மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 7 பேர் உள்பட நேற்று 343 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 494 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 34 ஆயிரத்து 195 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 574 ஆக உயர்ந்தது. 2 ஆயிரத்து 725 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 195 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரையில் மாவட்டம் முழுவதும் 33 ஆயிரத்து 501 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 31 ஆயிரத்து 223 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். ஆயிரத்து 717 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒருவர் மட்டும் உயிரிழந்ததையடுத்து, மாவட்டம் முழுவதும் இதுவரையில் 561 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர்.

படப்பை

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சோமங்கலம் பகுதியை சேர்ந்த 58 வயது ஆண், மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த 48 வயது ஆண், நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்த 74 வயது பெண், 35 வயது பெண், வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த 60 வயது ஆண் ஆகியோர் உள்பட மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 155 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுவரையில் மாவட்டம் முழுவதும் 22 ஆயிரத்து 691 பேர் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 21 ஆயிரத்து 486 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 876 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் ஒரே நாளில் 3 பேர் சிகிச்சை பலனின்றி பலியான நிலையில், மாவட்டம் முழுவதும் இதுவரையில் 329 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர்.

மேலும் செய்திகள்