பாளையங்கோட்டையில் காங்கிரசார் தர்ணா போராட்டம்

பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் வடபகுதியில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சியின் சார்பில் நேற்று மாலையில் தர்ணா போராட்டம் நடந்தது.

Update: 2020-10-05 23:29 GMT
நெல்லை,

பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் வடபகுதியில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சியின் சார்பில் நேற்று மாலையில் தர்ணா போராட்டம் நடந்தது.

நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளரும், காங்கிரஸ் பிரமுகருமான ரூபி மனோகரன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தர்ணா போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

உத்திரபிரதேச மாநிலத்தில் 19 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தவர்களை கண்டித்தும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற சென்ற ராகுல் காந்தியிடம் காட்டுமிராண்டிதனமாக நடந்து கொண்ட காவல் துறையை கண்டித்தும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் போட்டனர். போராட்டத்தில் வட்டார தலைவர்கள் டியூக் துரைராஜ், கணேசன், தொகுதி பொறுப்பாளர் அழகிய நம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்