மராட்டியத்தில் புதிதாக 14,578 பேருக்கு கொரோனா 355 பேர் உயிரிழந்தனர்

மராட்டியத்தில் நேற்று புதிதாக 14 ஆயிரத்து 578 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மேலும் 355 பேர் உயிரிழந்தனர்.

Update: 2020-10-07 21:34 GMT
மும்பை,

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் நேற்று புதிதாக 14 ஆயிரத்து 578 பேர் தொற்றுக்கு ஆளாகினர். இதன்மூலம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 லட்சத்து 80 ஆயிரத்து 489 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் நேற்று 355 பேர் உயிரிழந்ததன் மூலம் இறப்பு எண்ணிக்கை 39 ஆயிரத்து 72 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மட்டும் மாநிலம் முழுவதும் 16 ஆயிரத்து 715 பேர் நோயின் பிடியில் இருந்து விடுபட்டுள்ளனர். இதன்மூலம் ஆட்கொல்லி வைரசை போராடி வென்றவர்கள் எண்ணிக்கை 11 லட்சத்து 96 ஆயிரத்து 441 பேராக உயர்ந்துள்ளது. தற்போது 2 லட்சத்து 44 ஆயிரத்து 527 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மும்பையில்...

தலைநகர் மும்பையில் நேற்று புதிதாக 2 ஆயிரத்து 848 பேர் நோய் தாக்கத்திற்கு ஆளாகி உள்ளனர். இவர்களுடன் சேர்ந்து இதுவரை மும்பையில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 961 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மும்பையில் 46 பேர் வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தனர். இதன்மூலம் இங்கு இறந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்து 248 ஆகி உள்ளது. தாராவியில் புதிதாக 12 பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டனர்.

புனே நகர் பகுதியில் நேற்று பாதிக்கப்பட்ட 966 பேரை சேர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 62 ஆயிரத்து 96 ஆக உயர்ந்தது.

மேலும் செய்திகள்