சொத்து பிரச்சினையில் அண்ணனை சுட்டுக்கொன்ற தம்பி கைது

சொத்து பிரச்சினையில் அண்ணனை துப்பாக்கியால் சுட்டு கொன்ற தம்பி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-10-08 21:27 GMT
நாசிக்,

நாசிக் மாவட்டம் சின்னார் தாலுகா வட்ஜரே கிராமத்தை சேர்ந்தவர் தேவிதாஸ் குட்டே(வயது32). இவரது தம்பி கிருஷ்ணா(25). அண்மையில் அவர்களுக்கு சொந்தமான பண்ணை வீட்டின் காலி இடத்தை விற்பது தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணா நண்பர் பிரவின் (28) என்பவருடன் சேர்ந்து தனது அண்ணனை கொல்ல திட்டம் போட்டார்.

இதன்படி சம்பவத்தன்று தேவிதாஸ் குட்டே வீட்டின் வெளியே நிற்பதாக கிருஷ்ணாவிற்கு, பிரவின் தகவல் தெரிவித்தார்.

சுட்டு கொலை

உடனே அங்கு விரைந்து வந்த கிருஷ்ணா, தான் வைத்திருந்த துப்பாக்கியால் தனது அண்ணன் தேவிதாஸ் குட்டேயை நோக்கி 4 ரவுண்ட் சுட்டார். இதில் தோட்டா பாய்ந்து தேவிதாஸ் குட்டே படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணா மற்றும் நண்பர் பிரவின் ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள், 15 தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்