செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 363 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 363 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.

Update: 2020-10-08 23:34 GMT
வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 20 பேர், மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராமப்பகுதியில் 9 பேர், ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 4 பேர் உள்பட நேற்று 363 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38 ஆயிரத்து 487 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 35 ஆயிரத்து 294 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

நேற்று சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 584 ஆக உயர்ந்தது. 2 ஆயிரத்து 609 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

படப்பை

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை சேர்ந்த 21 வயதுடைய ஆண், 29 வயதுடைய பெண், மாடம்பாக்கத்தை சேர்ந்த 62 வயதுடைய முதியவர், ஆதனூர் பகுதியை சேர்ந்த 56 வயதுடைய ஆண் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனைத்தொடர்ந்து அவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 137 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இதுவரை மாவட்டம் முழுவதும் 23 ஆயிரத்து 120 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 21 ஆயிரத்து 899 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 880 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் இதுவரை 341 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் நேற்று ஒருவர் இறந்துள்ளார்.

மேலும் செய்திகள்