நீலகிரியில் மழை பெய்யாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

நீலகிரியில் மழை பெய்யாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

Update: 2020-10-09 00:20 GMT
பவானிசாகர்,

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக இருப்பது பவானிசாகர் அணை. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்யவில்லை.

இதனால் பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து குறைந்து வருகிறது. அணையின் நீர்மட்டமும் சரிந்து வருகிறது.

நீர்மட்டம் சரிவு

நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு அணைக்கு வினாடிக்கு 933 கனஅடி தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 100.86 அடியாக இருந்தது. நேற்று மாலை 5 மணிக்கு அணைக்கு வினாடிக்கு 776 கனஅடி தண்ணீர் மட்டுமே வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 100.62 அடியாக சரிந்தது.

வாய்க்கால்களுக்கு...

அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன பகுதிக்கு வினாடிக்கு 850 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

அணைக்கு நீர்வரத்து குறைந்ததை தொடர்ந்து அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 700 கனஅடியாக குறைக்கப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலில் வழக்கம்போல் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

மேலும் செய்திகள்