நெல்லையில் இமானுவேல் சேகரன் பிறந்த நாள் விழா

நெல்லையில் இமானுவேல் சேகரன் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

Update: 2020-10-09 23:38 GMT
நெல்லை,

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் நெல்லை மாநகர் மாவட்டம் சார்பில் தியாகி இமானுவேல் சேகரன் பிறந்தநாள் விழா பாளையங்கோட்டை மகராஜநகரில் நேற்று நடந்தது. அங்கு அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. மாநகர் மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமை தாங்கி, இமானுவேல்சேகரன் படத்திற்கு மாலை அணிவித்தார். அப்போது, தமிழக அரசு சார்பில் இமானுவேல் சேகரனுக்கு நெல்லையில் சிலை அமைக்க வேண்டும். அவரது பிறந்த நாள் மற்றும் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். தேவேந்திரகுல வேளாளர் அரசாணை வெளியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தொழிற்சங்க போக்குவரத்து பொதுச்செயலாளர் மகேந்திரன், இணைச் செயலாளர்கள் துரைப்பாண்டியன், பாலா சிவகுமார், மாணவரணி செயலாளர் சிவந்தி முத்துப்பாண்டி, கட்சி நிர்வாகிகள் யாபேஸ் பாண்டியன், கோவிந்தராஜ், ஸ்ரீராம், மணி, சுபின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை ராமையன்பட்டியில் மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் சார்பில் இமானுவேல் சேகரன் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அங்கு கட்சியின் நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில் கொள்கை பரப்பு செயலாளர் பாலமுருகன், நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் வண்ணை பிரசாந்த், பாளையங்கோட்டை ஒன்றிய செயலாளர் மருதம் சங்கிலி சரவணன், பாளையங்கோட்டை பகுதி செயலாளர் பசுபதிபாண்டியன், குப்பனாபுரம் செல்வேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மூலைக்கரைப்பட்டி

மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள எடுப்பல் கிராமத்தில், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த விழாவில் நாங்குநேரி ஒன்றிய தலைவர் தேவேந்திர சுதாகர், இமானுவேல் சேகரன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகிகள் காளிமுத்து, தேவா, மாசானமுத்து, அஜித், சதீஷ், பேபின்ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்