பெரம்பலூரில் சிறுமியை கடத்தி திருமணம் செய்த தொழிலாளி போக்சோவில் கைது

பெரம்பலூரில் சிறுமியை கடத்திச்சென்று திருமணம் செய்த தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-10-12 23:37 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூரில் உள்ள ஒரு ஆய்வகத்தில் 17 வயது சிறுமி வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 26-ந் தேதி முதல் அந்த சிறுமியை காணவில்லை என்று அவருடைய தந்தை பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதுமதி விசாரணை நடத்தினார். இதற்கிடையே கடலூர் மாவட்டம் விருதாச்சலம் திருவி.க. நகர் பாரதி தெருவை சேர்ந்த மெட்டல் கூரை அமைக்கும் தொழிலாளியான கணேஷ் (வயது 27) என்பவர், அந்த சிறுமியை காதலித்து கடத்தி திருமணம் செய்து கொண்டதாகவும், குடும்பம் நடத்தி வந்ததாகவும் தெரிய வந்தது.

இந்நிலையில் நேற்று கணேஷ் மற்றும் அந்த சிறுமியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதையடுத்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கணேசை கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அந்த சிறுமி மகளிர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

மேலும் செய்திகள்