பலத்த சூறாவளி காற்றால் ராமேசுவரம் பகுதியில் 5-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை

பலத்த சூறாவளி காற்றால் ராமேசுவரம் பகுதியில் 5-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-10-15 09:45 GMT
ராமேசுவரம், 

வங்கக்கடலில் உருவாகியிருந்த புதிய காற்றழுத்த தாழ்வு நிலையை தொடர்ந்து கடந்த 10-ம் தேதி முதல் ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், தனுஷ்கோடி பகுதியில் மறு அறிவிப்பு வரும் வரை விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது அதைத்தொடர்ந்து வங்கக்கடலில் உருவாகியிருந்த புதிய காற்றழுத்த தாழ்வுநிலை ஆந்திராவை ஒட்டி உள்ள பகுதியில் கரையை கடந்த நிலையிலும் ராமேசுவரம் தீவு பகுதியில் காற்றின் வேகம் குறையவில்லை. இதனால் தொடர்ந்து 5-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது ராமேசுவரம் தீவு பகுதியில் நாட்டுப்படகுகள், விசைப்படகுகள் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

5 நாட்கள் தொடர்ந்து மீன்பிடிக்க செல்ல தடைவிதிக்கப்பட்டு இருந்ததால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்