கோவில்பட்டி கிழக்கு போலீசாரை கண்டித்து உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி கிழக்கு போலீசாரை கண்டித்து நேற்று உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2020-10-15 17:40 GMT
கோவில்பட்டி,

கோவில்பட்டியில் கிழக்கு போலீசாரை கண்டித்து கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் சார்பில் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார். கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு செயலாளர் பெஞ்சமி பிராங்கிளின் முன்னிலை வகித்தார். கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினர் பாலமுருகன், எட்டயபுரம் நகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் ராஜசேகரன், 5-ம் தூண் நிறுவனர் சங்கரலிங்கம், நாம் தமிழர் கட்சி வக்கீல் ரவிக்குமார், அனைத்து ரத்த தான கழக ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ், ஏ.ஐ.டி.யு.சி. மாநில குழு உறுப்பினர் ஜானகி, மாவட்ட செயலாளர் சேது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, கிழக்கு போலீசாரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

கோரிக்கை மனு

பின்னர் அவர்கள் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகானந்தத்திடம் வழங்கிய கோரிக்கை மனுவில், கடந்த 5-ம் தேதி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவர் தமிழரசனை கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில், போலீசார் அவதூறாக பேசினர். இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் செய்யப்பட்டுள்ளது. எனவே, கிழக்கு போலீஸ் நிலைய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும்’ என தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்