மத்திய ரெயில்வே வழித்தடத்தில் கூடுதலாக 28 மின்சார ரெயில் சேவை விரைவில் 700 ஆக அதிகரிக்க முடிவு

மத்திய ரெயில்வே வழித்தடத்தில் நேற்று முதல் கூடுதலாக 28 மின்சார ரெயில் சேவைகள் விடப்பட்டு உள்ளது. விரைவில் 700 சேவைகளாக அதிகரி்க்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2020-10-15 21:36 GMT
மும்பை,

மும்பையில் கொரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.

மும்பையின் போக்குவரத்திற்கு உயிர்நாடியாக விளங்கும் மின்சார ரெயில் சேவையில் தொடக்கத்தில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், அரசுடமை வங்கிகள், மருந்து நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அத்தியாவசிய பணி ஊழியர்கள் மட்டும் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் தற்போது தளர்வுகள் காரணமாக டப்பாவாலாக்கள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள், ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள், புற்றுநோயாளிகள் போன்றவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

அதிகரிக்கும் கூட்டம்

இதனால் ரெயில்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது. எனவே சமூக இடைவெளியை பின்பற்ற ஏதுவாக மத்திய ரெயில்வே சார்பில் கூடுதல் ரெயில் சேவைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி மத்திய ரெயில்வே நேற்று முதல் கூடுதலாக 28 மின்சார ரெயில் சேவைகளை இயக்க அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் மத்திய ரெயில்வே இயக்கிவரும் மின்சார ரெயில் சேவைகளின் எண்ணிக்கை 481 ஆக அதிகரித்து உள்ளது.

மேலும் கூடுதல் ரெயில்களை இயக்க நேர அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனால் மேலும் 219 ரெயில் சேவைகளை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதன்மூலம் விரைவில் மொத்த சேவை கள் 700 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல மேற்கு ரெயில்வேயில் நேற்று முதல் 10 ஏ.சி. மின்சார ரெயில்கள் உள்பட 194 ரெயில் சேவைகள் கூடுதலாக உயர்த்தப்பட்டு தற்போது 700 ரெயில்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்