மராட்டியத்தில் புதிதாக 10 ஆயிரத்து 259 பேருக்கு கொரோனா பாதிப்பு

மராட்டியத்தில் புதிதாக 10 ஆயிரத்து 259 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

Update: 2020-10-17 22:00 GMT
மும்பை,

மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதில் நேற்று மாநிலத்தில் புதிதாக 10 ஆயிரத்து 259 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாநிலத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 லட்சத்து 86 ஆயிரத்து 321 ஆக அதிகரித்து உள்ளது.

இதில் 13 லட்சத்து 58 ஆயிரத்து 606 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று மட்டும் 14 ஆயிரத்து 238 பேர் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 85 ஆயிரத்து 270 பேர் வைரஸ் நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல மாநிலத்தில் புதிதாக 250 பேர் பலியாகி உள்ளனர். இதனால் மராட்டியத்தில் இதுவரை தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 965 ஆக உயர்ந்து உள்ளது.

மும்பையை பொறுத்தவரை நேற்று புதிதாக 1, 791 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 40 ஆயிரத்து 335 ஆக உயா்ந்து உள்ளது. இதேபோல 47 பேர் பலியானதால் நகரில் இதுவரை ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 739 ஆகி உள்ளது. புனே நகரில் புதிதாக 417 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்