வரிச்சிக்குடி அகத்தீஸ்வர சுவாமி கோவிலில் பாலாலய பூஜை

கோவில் கும்பாபிஷேகம் பணிகளை தொடங்குவதற்காக பாலாலய பூஜை நேற்று நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் மாலை மகா சங்கல்பம், கலச பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தது. நேற்று காலை பூர்ணாகுதி, தீபாராதனை செய்யப்பட்டு பாலாலயம் நடைபெற்றது.

Update: 2020-10-18 21:55 GMT
காரைக்கால்,

காரைக்காலை அடுத்த வரிச்சிக்குடியில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த அகத்தீஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணி நடத்தி, கும்பாபிஷேகம் செய்ய அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். இதையொட்டி கோவில் கும்பாபிஷேகம் பணிகளை தொடங்குவதற்காக பாலாலய பூஜை நேற்று நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் மாலை மகா சங்கல்பம், கலச பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தது. நேற்று காலை பூர்ணாகுதி, தீபாராதனை செய்யப்பட்டு பாலாலயம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நெடுங்காடு தொகுதியை சேர்ந்த சந்திர பிரியங்கா எம்.எல்.ஏ., தேவஸ்தான அறங்காவல் வாரிய தலைவர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்