கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு உத்தரகாண்ட் ஐகோர்ட்டு நோட்டீஸ்

அரசு பங்களாவுக்கு வாடகை செலுத்தாத கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரகாண்ட் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-10-20 21:12 GMT
மும்பை,

மராட்டிய மாநில கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்-மந்திரி ஆவார். எனவே அந்த மாநிலத்தில் அவருக்கு முன்னாள் முதல்-மந்திரி என்ற வகையில் அரசு பங்களா ஒதுக்கப்பட்டது. ஆனால் அவர் பங்களாவுக்கு உரிய வாடகையை செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

இதுதொடர்பான மனுவை விசாரித்த அந்த மாநில கோர்ட்டு கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் அரசு பங்களாவுக்கு மார்க்கெட் நிலவரத்துக்கு ஏற்ற வாடகையை 6 மாதத்திற்குள் செலுத்த பகத்சிங் கோஷ்யாரிக்கு உத்தரவிட்டது. ஆனால் அவர் கோர்ட்டு உத்தரவின்படி பங்களாவுக்கான வாடகையை செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

நோட்டீஸ்

இதையடுத்து உத்தரகாண்ட் ஐகோர்ட்டில் தொண்டு நிறுவனம் ஒன்று பகத்சிங் கோஷ்யாரி மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தொடர்ந்து உள்ளது.

இதை விசாரித்த நீதிபதி சரத்குமார் இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்க கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்