ஏக்நாத் கட்சே பா.ஜனதாவில் இருந்து விலகலா? தேவேந்திர பட்னாவிஸ் பதில்

ஏக்நாத் கட்சே பா.ஜனதாவில் இருந்து விலகப்போவதாக கூறப்படுவதற்கு முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதிலளித்தார்.

Update: 2020-10-20 21:15 GMT
மும்பை,

தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியில் அவருக்கு அடுத்த இடத்தில் மந்திரியாக இருந்தவர் பா.ஜனதா மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே. எனினும் ஊழல் புகாரில் சிக்கி 2016-ம் ஆண்டு மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு அவர் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அவருக்கு போட்டியிட கூடவாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் தேவேந்திர பட்னாவிஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வந்தார்.

மேலும் பா.ஜனதா மீது அதிருப்தியில் உள்ள அவர் கட்சி மாற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போது நாளை (வியாழக்கிழமை) அவா் தேசியவாத காங்கிரசில் சேர உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

தினந்தோறும் பேசுகிறார்கள்

இது குறித்து உஸ்மனாபாத்தில் வெள்ளபாதிப்புகளை ஆய்வு செய்ய சென்ற முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:-

அதுபோன்ற நேரம் (கட்சே கட்சி மாறுவது) குறித்து தினந்தோறும் பேச்சுகள் அடிபடுகின்றன. நான் அதுகுறித்து பேசப்போவதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏக்நாத் கட்சே சட்டசபை எதிா்க்கட்சி தலைவராக இருந்த போது பா.ஜனதாவை வளர்க்க கடுமையாக உழைத்தவர் என அவருக்கு சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் புகழாரம் சூட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்