வடகிழக்கு பருவ மழையை சமாளிப்பது எப்படி? அதிகாரிகளுடன் கலெக்டர் அர்ஜூன் சர்மா ஆலோசனை

வடகிழக்கு பருவமழை பெய்ய இருப்பதையொட்டி அதை சமாளிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் அர்ஜூன் சர்மா ஆலோசனை நடத்தினார்.

Update: 2020-10-21 22:32 GMT
காரைக்கால்,

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதையொட்டி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா தலைமையில் நேற்று மாலை ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பொதுப்பணி, உள்ளாட்சி, மின்சாரம் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் அர்ஜூன்சர்மா பேசியதாவது:-

வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளதால் அதை எதிர்கொள்ளும் வகையில் பொதுப்பணி, உள்ளாட்சி மற்றும் அனைத்து அரசுத் துறைகளும், கொம்யூன் பஞ்சாயத்தும் போதுமான உபகரணங்களுடன் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

தயார் நிலை

குறிப்பாக பொதுமக்களுக்கு தடையில்லா குடிநீர், மின்சாரம், மருந்துகள், மத்திய சமையல் கூடம், அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கச் செய்ய வேண்டும். அதிக மழையின்போது பாதிப்பு ஏற்படாமல் இருக்க மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான இடவசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட துணை கலெக்டர் பாஸ்கரன், போலீஸ் சூப்பிரண்டுகள் ரகுநாயகம், வீரவல்லபன், நகராட்சி ஆணையர் சுபாஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்